TNPSC Thervupettagam

குறைக்கடத்தி துறை பற்றிய ISRC அறிக்கை

October 29 , 2023 266 days 169 0
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தியக் குறைக்கடத்தி அறிக்கை மற்றும் செயல் திட்டங்கள் (ISRC) அறிக்கையானது குறைக்கடத்தி துறையில் இந்தியாவின் பெரும் முன்னிலையினை உறுதியளிக்கிறது.
  • ISRC அறிக்கையானது 6.7 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் இந்தியாவின் குறைக் கடத்தி உற்பத்தித் தொழில் துறையினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் 20% சந்தைப் பங்களிப்பை அடைவதற்கான செயல்திட்டத்தினை இவ்வறிக்கையானது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • குறைக்கடத்தி தொழில் துறையானது, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவதால், திறன்பேசிகள் முதல் இராணுவக் கட்டமைப்புகள் வரை அனைத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
  • குறைக் கடத்திகளின் நிகர இறக்குமதியாளராக இந்தியா திகழ்ந்து வருகிறது.
  • இந்திய நாடானது அதன் சில்லுகளுக்கான தேவைகளுக்காக தைவான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளைப் பெரிதும் சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்