இந்திய ரிசர்வ் வங்கி ஆனது பின்வரும் இரண்டு வகையான வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்காக (NBFCs) உள்துறை ரீதியிலான குறைதீர்ப்புச் செயல்முறையை அறிமுகப் படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த இரண்டு வகையான வங்கி சாரா நிதி நிறுவனங்களாவன
10 அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகளுடன் கூடிய வைப்புத் தொகை பெறுகின்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs-D) மற்றும்
பொது வாடிக்கையாளர்களுக்கான இடைமுகம் கொண்ட, ரூ.5,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்டச் சொத்து மதிப்புடன் கூடிய, வைப்புத் தொகை பெறாத வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs-ND) ஆகியவை ஆகும்.