TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மாற்றுப் பயிர்கள்

June 3 , 2019 1876 days 571 0
  • ஹரியானா மாநிலத்தில் நிலத்தடி நீர் குறைந்து வருவதனால் நீர் அதிகம் தேவைப்படும் பயிரான நெல்லைப் பயிரிடுவதைக் குறைப்பதற்கு ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது.
  • கடந்த ஆண்டுகளில் நிலத்தடி நீர்க் குறைவானது அம்மாநிலத்தில் 60 வறட்சி மண்டலங்கள் உருவாகக் காரணமாகியுள்ளது. இதில் 10 மாவட்டங்களில் 21 மிக அதிக மிக வறட்சி மண்டலங்களும் உள்ளடங்கும்.
  • அம்மாநில அரசு 7 வட்டாரங்களில் ஒரு பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டம் விவசாயிகளுக்கு மானியங்கள் அளிக்கப்படுவதன் மூலம் “மக்காச் சோளம்” மற்றும் ‘துவரம் பருப்பு’ பயிரினங்களைப் பயிரிடுவதை ஊக்குவிப்பதாகும்.
  • புதிய திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா விதைகள் வழங்கப்பட விருக்கின்றன. விவசாயிகளுக்கு இரண்டு தவணைகளாக ஏக்கருக்கு ரூபாய் 2000 உதவித் தொகை வழங்கப்படும்.
  • மக்காச் சோளப் பயிர்க் காப்பீட்டுத் தொகையானது அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட விருக்கின்றது.
  • மேலும், உற்பத்தி செய்யப்பட்ட மக்காச் சோளம் அரசினால் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்