2025-26 ஆம் ஆண்டின் ராபி பயிர்ப்பருவத்தின் சந்தைப்படுத்தல் பருவத்தில் (RMS) ஆறு வகை ராபி பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படும் இரண்டாவது வகைப் பயிரான கோதுமைப் பயிரின் புதிய MSP ஆனது தற்போதைய MSP விலையை விட குவிண்டாலுக்கு சுமார் 150 அல்லது 6.59 சதவீதம் அதிகரித்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தப் புதிய MSP விலைகள் ஆனது கோதுமைப் பயிருக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,425 ரூபாயாகவும், பார்லிக்கு 1,980 ரூபாயாகவும், உளுந்துக்கு 5,650 ரூபாயாகவும், பருப்பு வகைகளுக்கு 6,700 ரூபாயாகவும், காட்டுக் கடுகு (ராப்சீட்) மற்றும் கடுகுக்கு 5,950 ரூபாயாகவும், மற்றும் குங்குமப்பூவிற்கு 5,940 ரூபாயாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.