TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலை - கொப்பரை

February 13 , 2018 2478 days 1202 0
  • எண்ணெய் கொப்பரை தேங்காய்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை (Minimum Support Price - MSP) அதிகரிப்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2018 பயிர் சாகுபடி ஆண்டில் நியாயமான சராசரி தரத்தில் (Fair Average Quality - FAQ) தேங்காய்களை உற்பத்தி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இவ்வாறு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையானது தேங்காய் விவசாயிகளுக்கு பொருத்தமான குறைந்தபட்ச விலையினை அளிப்பதோடு, தேங்காய் சாகுபடிக்கான முதலீட்டை உயர்த்துகிறது. இதன் விளைவாக தேங்காய் உற்பத்தியும், நாட்டின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.
  • விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (Commission for Agricultural Costs and Prices - CACP) வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனம் (National Agricultural Cooperative Marketing Federation of India Limited - NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இந்திய நிறுவனம் (National Cooperative Consumer Federation of India Limited - NCCF) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தேங்காய் விளையும் மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமைகள் ஆகும்.

விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (CACP)

  • CACP என்பது பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அரசுக்கு பரிந்துரை செய்யும் வல்லுனர் குழுவாகும். இக்குழுவானது பயிர்களின் உற்பத்தி செலவு, உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் விவசாய பொருட்களின் விலைகளின் போக்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை நிர்ணயிக்கின்றது.
  • இந்த ஆணையம் ஜனவரி மாதம் 1965ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம் இயங்குகின்றது.
  • இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள்
    • தலைவர்
    • உறுப்பினர் செயலாளர்
    • ஒரு உறுப்பினர் (அதிகாரப் பூர்வமாக)
    • இரண்டு பிற உறுப்பினர்கள் (அதிகாரப் பூர்வம் அல்லாத)
  • அதிகாரம் அளிக்கப்படாத (Non-Official) இரண்டு பிற உறுப்பினர்கள் பொதுவாக விவசாய சமூகத்தின் பிரதிநிதிகள் ஆவர். இவர்கள் விவசாய சமூகங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்