குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை (MDD) குறித்த புதிய குறிகாட்டியை ஐக்கிய நாடுகளின் புள்ளி விவர ஆணையம் ஏற்றுள்ளது.
இந்தக் குறிகாட்டியானது 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரலின் கீழ் உள்ள அதன் 17 இலக்குகளில் ஒன்றான பட்டினி நிலையின்மை குறித்த 2வது நிலையான மேம்பாட்டு இலக்கினை நோக்கிய முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும்.
MDD என்பது நாம் உட்கொள்ளும் உணவுகளின் வகையைக் குறிக்கிறது மற்றும் நமது உணவின் தரம் ஆரோக்கியம், வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நல்வாழ்வுக்கு மிகவும் அவசியமானது என்பதால் இது முக்கியமானதாகும்.
MDD என்பது கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள், வரையறுக்கப் பட்ட 10 உணவுக் குழுக்களில் குறைந்தது ஒரு ஐந்து உணவு வகைகளை உட்கொண்டு இருக்கிறார்களா என்பதற்கு ஆம்/இல்லை என ஒரு பதிலை வழங்கும் வகையிலான ஒரு குறிகாட்டியாகும்.