தில்லி அரசாங்கமானது “குறைந்தபட்ச ஊதிய நடவடிக்கை” என்ற பெயர் கொண்ட 10 நாள் சிறப்பு சோதனையிடல் முகாமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது யூனியன் பிரதேச அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாமாகும்.
இந்த சிறப்பு முகாம் நடவடிக்கையானது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதன்மூலம் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 2017-ன் படி விதிமீறல்களை ஆய்வு செய்ய முடியும். மேலும் இச்சட்டத்தின்படி பணியாளர்கள் 155214 என்ற எண்ணை அழைத்து தங்களது புகாரைப் பதிவு செய்ய முடியும்.