சூரியசக்தி உற்பத்தி தகடுகள் மூலம் பொருளாதார ரீதியாக மின்சாரமாக மாற்றக் கூடிய சூரியக் கதிர்வீச்சின் அளவு ஆனது இந்தியாவில் பல இடங்களில் "ஆபத்தான நிலையில் குறைந்து வரும் போக்கை" கொண்டுள்ளது.
உலகளாவிய சூரியக் கதிர்வீச்சு ஆனது, பொதுவாக 1981-2006 வரையிலான காலக் கட்டத்தில் இருந்து குறைந்து வரும் போக்கைக் காட்டியுள்ளது.
1981-2006 காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது 1971-2000 காலக் கட்டத்தில் சூரியக் கதிர் வீச்சின் கிடைக்கப் பெறும் அளவு குறைந்திருந்தது.
இருப்பினும், ஒட்டு மொத்தமாக, 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சரியான காரணங்கள் தெளிவாகத் தெரியாத வகையில் இந்தப் போக்கில் மாறுதல் ஏற்பட்டது.
தூசிப் படலங்களின் அளவு அதிகரித்தல் மற்றும் மேகமூட்டம் ஆகியவை இதற்கான காரணிகளாகக் கூறப்பட்டாலும், மிகவும் திறம் மிக்க சூரியசக்தி மின் தகடுகளை நிறுவுவது இதை எதிர்கொள்ள உதவும்.
தூசிப்படலங்கள் ஆனது சூரிய ஒளியை உறிஞ்சி நிலப்பரப்பில் விழாமல் திசை திருப்புகின்றன என்பதோடு மேலும் அவை அடர்த்தியான மேகங்களை உருவாக்கி, மீண்டும் சூரிய ஒளியானது புவியின் நிலப்பரப்பில் விழாமல் தடுக்கின்றன.
சூரியசக்தி மின் தகடுகளின் செயல்திறன் ஆனது, அவற்றின் மீது படும் சூரிய ஒளியின் அளவைப் பொறுத்தே அமைகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காக்கள் வடமேற்கில், குறிப்பாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் ஆனது, சுமார் 81 GW (1 GW என்பது 1,000 மெகா வாட்) அல்லது மொத்த நிறுவப்பட்ட மின்சாரத்தில் தோராயமாக 17% ஆகும்.