குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலை அமைப்பு
August 22 , 2017 2652 days 1112 0
குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலை அமைப்புத் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் காவல்துறை இனைவாயிலை (Digital Police Portal) மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் காவல்துறைப் பணிகள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், குற்றவியல் வழக்குகள், தடயவியல் ஆய்வகங்கள், கைரேகைப் பதிவுகள் மற்றும் சிறுவர் சீர்திருத்த இல்லங்கள் போன்ற குற்றவியல் நீதி அமைப்பின் பல்வேறு தரவுகள், குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலை அமைப்பில் ஒருங்கிணைக்கப்படும்.
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் இந்தத் தரவுத்தளத்தை அணுகி, நாட்டின் எந்தப் பகுதியிலும் இருக்கும் எந்தவொரு குற்றவாளியைக் குறித்தும் தகவல் தெரிந்துக்கொள்ள முடியும்.
குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலை அமைப்பு
குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலை அமைப்பு என்பது நாட்டின் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் செயல்படுத்தும் ஒரு குறிக்கோள் திட்டம் ஆகும்.
நாட்டில் காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ளவும் , தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்றம் மற்றும் புலனாய்வு பணிகளை எளிதாக ஒருங்கிணைக்கவும் இந்த வலையமைப்புச் செயல்படுகிறது.