குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தச் சட்டம்) மசோதா, 2018
March 16 , 2018 2478 days 841 0
12 வயதுக்கு கீழான சிறார்களை பாலியல் பலாத்காரம் அல்லது கூட்டு பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்யும் மசோதாவை {சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தம்) மசோதா, 2018} ராஜஸ்தான் மாநில சட்டமன்றம் இயற்றியுள்ளது.
இதன் மூலம், மத்தியப் பிரதேசத்தினைத் தொடர்ந்து சிறார் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கும் நாட்டின் இரண்டாவது இந்திய மாநிலமாக இராஜஸ்தான் உருவாக்கியுள்ளது.
இந்த குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தம்) மசோதா, 2018 ஆனது 1860-ன் ஆண்டின் இந்திய குற்றவியல் சட்டத்தில் (IPC – Indian Penal Code) பிரிவு 376-AA, பிரிவு 376-DD என இரு பிரிவுகளை சேர்க்கிறது.
இதற்கு முன் 2017-ல் மத்தியப் பிரதேச மாநிலமானது “குற்றவியல் சட்டம் (மத்தியப் பிரதேச திருத்த ) மசோதா 2017” {The Penal law (Madhya Pradesh Amendment) Bill 2017} எனும் மசோதாவை நிறைவேற்றியது. இது சிறார் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வழிகோலுகின்றது.