TNPSC Thervupettagam

குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா, 2018

August 1 , 2018 2183 days 1568 0
  • 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா, 2018- ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இம்மசோதா ஏப்ரல் 2018-ல் குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர சட்டத்திற்கு பதிலாக அமையும். மேலும் இந்திய குற்றத் தண்டனை விதி (Indian Penal Code - IPC), குற்றவியல் நெறிமுறைச் சட்டம் (Criminal Procedure Code), பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைக் காத்தல் சட்டம் (Protection Children from Sexual Offences - POSCO) மற்றும் இந்திய சான்றுரைச் சட்டம் (Indian Evidence Act) போன்றவற்றையும் இம்மசோதா திருத்தி அமைக்கிறது.

இம்மசோதாவில்

  • 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர்களுக்கு 20 வருட கடும் காவல் தண்டனை (அ) ஆயுட் தண்டனை (அ) மரண தண்டனை விதிக்கப்படும்.
  • 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை கும்பல் கற்பழிப்புக்கு உள்ளாக்குபவர்களுக்கு மரண தண்டனை (அ) மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
  • 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் (அ) கும்பலாக பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்படாது.
  • விரைந்த புலனாய்வு மற்றும் வழக்கு விசாரணை ஆகியவற்றை இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
  • கற்பழிப்பு வழக்குகளுக்கான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்