TNPSC Thervupettagam

குற்றவியல் நீதி தரவு தளத்தின் பயன்பாடு

January 4 , 2024 197 days 181 0
  • உள்ளிடை இயங்கு (பரிமாற்ற) தன்மையிலான நீதி அமைப்பு (ICJS) தளத்தில் அதிக வழக்குகளைப் பதிவு செய்வதில் உத்தரப் பிரதேசம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ICJS தளத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் இதுவரை 1.56 கோடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
  • 35 லட்சம் பதிவுகளுடன் மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 16 லட்சம் பதிவுகளுடன் பீகார் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • ICJS என்பது உச்ச நீதிமன்றத்தின் இணைய குழுவினால் கருத்துருவாக்கம் செய்யப் பட்டு உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்த தளம் ஆனது, நாடு முழுவதும் உள்ள குற்றவியல் நீதி அமைப்பின் பல்வேறு அமைப்புகளுக்கு இடையில் தரவு மற்றும் தகவல்களை தடையின்றி இடமாற்றுவதற்கு உதவுகிறது.
  • இவற்றில் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தரவுகள் ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் நீதிமன்றங்கள், காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்