TNPSC Thervupettagam

குற்ற விசாரணை அமைப்பின் முதலாவது பெண் தலைவர் - தென் ஆப்பிரிக்கா

December 6 , 2018 2086 days 608 0
  • தென் ஆப்பிரிக்க அதிபர் சைரில் ரமபோசா தென் ஆப்பிரிக்க குற்ற விசாரணை அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்குரைஞரான ஷமிளா படோஹியை நியமித்துள்ளார்.
  • இப்பதவியை ஏற்கவிருக்கும் முதல் பெண் படோஹி ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் இயக்குநராக தனது புதிய பொறுப்பை ஏற்கவிருக்கிறார் (NDPP - National Director of Public Prosecutions).
  • இவர் குவா சூலு நட்டல் மாகாணத்தில் முன்னாள் விசாரணைத் தலைவராக பணியாற்றினார். மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC - International Criminal Court) விசாரணை அதிகாரிக்கு மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.
  • 1995 ஆம் ஆண்டில் நிறவெறித் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நெல்சன் மண்டேலாவால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்