TNPSC Thervupettagam

குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவு தளம்

March 2 , 2024 139 days 266 0
  • சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக அமைக்கப்பட உள்ள குலசேகரப் பட்டினம் விண்வெளி ஏவு தளம் ஆனது இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப் படும்.
  • இது ஆண்டிற்கு சுமார் 24 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
  • இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்திலிருந்து ஒரு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் போது ஏவு கலம் முதலில் கிழக்கு நோக்கிச் சென்று, பின்னர் தெற்கு நோக்கி திரும்பும்.
  • ஆனால் குலசேகரன்பட்டினம் விண்வெளி ஏவு தளத்திலிருந்து செயற்கைக்கோள் ஏவப்படும் போது இந்த திசைதிருப்பல் செயல்பாட்டின் அவசியம் இருக்காது என்பதால் ஏவு கலங்கள் நேராக தெற்கு திசையில் பயணிக்க முடியும்.
  • மேலும், ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு (நிலநடுக் கோட்டிற்கு) அருகில் உள்ளது.
  • 500 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள செயற்கைக்கோள்களைப் புவி தாழ் மட்ட சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு SSLV ஏவு வாகனங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்