TNPSC Thervupettagam

குளிர்காலக் கூட்டத்தொடர் 2024

December 24 , 2024 3 days 64 0
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளின் குளிர்காலக் கூட்டத் தொடரும் தேதி எதுவும் அறிவிக்கப் படாமல் ஒத்தி வைத்ததுடன் முடிவடைந்துள்ளது.
  • இந்தக் கூட்டத் தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா அனுசரிப்பு, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகியவை இடம் பெற்றன.
  • "ஒரு தேசம் ஒரு தேர்தல்" திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக மேற் கொள்ளப் படும் அரசியலமைப்பு (129) திருத்த மசோதா, 2024 மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 போன்ற விவாதத்திற்குரிய மசோதாக்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
  • மக்களவையில் வெறும் நான்கு மசோதாக்களும், மாநிலங்களவையில் வெறும் மூன்று மசோதாக்களும் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
  • இதில் மக்களவையின் செயல்பாட்டுத் திறன் 54.5% ஆகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத் திறன் 40% ஆகவும் இருந்தது.
  • பட்டியலிடப்பட்ட 16 மசோதாக்களில், பாரதிய வாயுயான் விதேயக், 2024 என்ற ஒரே ஒரு மசோதா மட்டுமே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
  • மக்களவையின் முதல் ஆறு மாதங்களில் ஒரே ஒரு மசோதா மட்டுமே நிறைவேற்றப்ப ட்டது.
  • கடந்த ஆறு மக்களவைகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த செயல்திறன் கொண்டதாகும்.
  • மாநிலங்களவையில், மொத்தம் 19 நாட்களில் 15 நாட்கள் அளவிலான கேள்வி நேரம் செயல்படுத்தப்படவில்லை.
  • மக்களவையில், 20 நாட்களுள் 12 நாட்களில் 10 நிமிடங்களுக்கு மேல் கேள்வி நேரம் செயல்படுத்தப்படவில்லை.
  • மக்களவையில் தனிநபர் மசோதா குறித்த விவாதங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை மற்றும் மாநிலங்களவையில் ஒரு தீர்மானம் மட்டுமே விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்