TNPSC Thervupettagam

குளிர்கால ஒலிம்பிக் 2018

December 8 , 2017 2542 days 824 0
  • அரசு உடந்தையோடு மேற்கொள்ளப்பட்ட ஊக்க மருந்து பயன்பாடு விவகாரத்தால்  2018 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இரஷ்யா பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது.
  • இருப்பினும் போதை மருந்து விவகாரத்தில் சிக்காத பிற இரஷ்யா ஒலிம்பிக் வீரர்கள் “இரஷ்யாவிலிருந்து வந்துள்ள ஒலிம்பிக் தடகள வீரர்கள்” என்ற பெயரின் கீழ் ஒலிம்பிக் அமைப்பின்  சார்பில்  பங்கு பெறுவர்.
  • மேலும், 2018 குளிர்கால ஒலிம்பிக்கின் எந்த நிகழ்ச்சிகளிலும் இரஷ்யாவின் கொடி பறக்க விடக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தென்கொரியாவின் பியாங்சங் நகரில் இன்னும் இரு மாதங்களில், குளிர்கால ஒலிம்பிக் தொடங்க உள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால்   (International Olympic Committee) ஊக்க மருந்து மோசடிக்கு இதுவரை வழங்கப்பட்ட தண்டனைகளில் இதுவே மிகவும் கடுமையானதாகும்.
  • அரசு ஆதரவுடன் இரஷ்ய தடகள வீரர்கள் விரிவான ஊக்க மருந்து பயன்பாட்டு மோசடியில் ஈடுபட்டதையும், குறிப்பாக உச்ச அளவில் 2014 ஆம் ஆண்டு சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து பயன்படுத்தியதையும் உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் (WADA – Word Anti – Doping Agency) அறிக்கையும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இரு விசாரணைகளும் உறுதிபடுத்தியுள்ளன.
  • சோச்சி ஒலிம்பிக் போட்டியின் போது இரஷ்ய விளையாட்டு அமைச்சராக இருந்த, தற்போது துணை பிரதமராக உள்ள விடாலே முட்கோவிற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வாழ்நாள் தடை விதித்துள்ளது.
  • 2018-ல் இரஷ்யாவில் நடைபெற உள்ள பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஏற்பாட்டு அமைப்பின் தலைவராக விடாலே முட்கோ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்