TNPSC Thervupettagam

குளிர்கால திருவிழா

April 10 , 2018 2453 days 857 0
  • மாநிலத்தில்  விளிம்பு நிலையிலுள்ள கிராமத்தினருடைய (fringe villagers)  உள்ளூர் உணவு மற்றும கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக   இரண்டு நாள் அஸ்ஸாம் குளிர்கால திருவிழாவானது (Assam Spring Festival)   அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மனாஸ் தேசியப் பூங்காவில்  (Manas National Park)  நடத்தப்பட்டுள்ளது.
  • சுவன்கர் மிதிங்கா ஓன்சாய் அபாத் (Swankar Mithinga Onsai Afat) எனும் அமைப்பும் இந்திய நெசவாளர்கள் சங்கமும் (Indian Weavers’ Association)  இணைந்து இந்தத் திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளன.
  • மனாஸ் தேசியப் பூங்காவானது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக இயற்கைப் பாரம்பரிய இடமாகும் (UNESCO Natural World Heritage site).
  • மேலும், இந்தப் பூங்காவானது ஒரு புலிகள் காப்பகம் (Project Tiger reserve), உயிர்க்கோள காப்பகம் (biosphere reserve) மற்றும் யானைகள் காப்பகம் (elephant reserve) ஆகியவற்றைக் கொண்டதாகும்.
  • மனாஸ் தேசியப் பூங்காவின் வழியே பிரம்மபுத்திரா நதியின் முக்கிய கிளை நதியான மனாஸ் நதி (Manas river) ஓடுகின்றது.
  • இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மனாஸ் தேசியப் பூங்காவானது பூடான் நாட்டில் அமைந்துள்ள ராயல் மனாஸ் தேசியப் பூங்காவினை ஒட்டி (Royal Manas National Park) அதனருகே  அமைந்துள்ளது.
  • புலிகள், இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், இந்திய யானைகள் போன்ற பல்வேறு ஆபத்துக்குள்ளான இனங்கள் உட்பட பல்வேறு  வகையான வன உயிர்கள் இத்தேசிய பூங்காவில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்