ஜோங் ஜோங் (Zhong Zhong) மற்றும் ஹீவா ஹீவா (Hua Hua) எனும் இரு ஒத்த நீண்ட வால் குரங்குகளை சீன ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக முதல் முறையாக குளோனிங் செய்துள்ளனர்.
உலகின் முதல் குளோனிங் உயிரினமான டாலி செம்மறியாட்டை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அதே குளோனிங் செய்முறையே குளோனிங் குரங்குகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கரு அல்லா செல்லிலிருந்து (Non-Emtoryonic Cell) குளோனிங் செய்யப்படும் உலகின் முதல் குரங்குகள் இந்த நீண்டவால் குரங்குகளேயாகும்.
குரங்குகள் குளோனிங் செய்யப்பட்டது உலக அளவில் அறிவியல் அரங்கில் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் கடந்த காலங்களில் குரங்குகள் குளோனிங் தொழிற்நுட்பத்திற்கு எதிர்ப்புத் தன்மை (resistant) கொண்டவையாக இருந்து வந்தன.
சொமேடிக் செல் அணுக்கரு பரிமாற்றம் (Somatic Cell nuclear Transfer) என்ற செயல்முறையின் மூலம் குரங்குகள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன. இந்த செயல் முறையில் ஏற்கனவே உட்கரு (nucleus) நீக்கப்பட்ட கரு முட்டையினுள் DNA-கூறுகளை உள்ளடக்கிய வேறொரு செல்லின் உட்கரு பரிமாற்றம் செய்யப்பட்டு குளோனிங் மேற்கொள்ளப்படும்.