TNPSC Thervupettagam

குளோபல் வங்கிகளின் ‘அதிக ஆபத்து விளைவிக்கக்கூடிய எல்லையின் பட்டியல்‘

July 10 , 2018 2331 days 727 0
  • சமீபத்தில் முக்கியப் பாதுகாப்பாளர் வங்கிகள் ‘அதிக ஆபத்தை உடைய எல்லைகளைக்’ கொண்ட 25 நாடுகளின் பட்டியலை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடன் (SEBI - Securties and Exchange Board of India) பகிர்ந்துள்ளது.
  • வெளிநாட்டு நிதிகளின் பாதுகாவலராக இருக்கும் குளோபல் வங்கிகள் சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ் மற்றும் மொரீசியஸ் உள்பட 21 நாடுகளை ‘அதிக ஆபத்தை உடைய எல்லைகளாக‘ பெயரிட்டுள்ளது.
  • பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் இந்த நிதியின் மூலம் பயனடையும் முதலாளிகள் ஆகியோர் ‘அதிக ஆபத்தை உடைய எல்லைகள்‘ வழியாக இந்தியாவிற்குள் நுழையும்போது அதிகளவில் சோதனையிடப்படுவார்கள்.
  • இந்திய செலவாணியின் மேல் வர்த்தகம் செய்வதற்கு இந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நிதியத்தில் பங்கு பெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்வார்கள்.
  • 56 நாடுகளின் மூலமாக செபியிடம் பதிவு செய்யப்பட்ட அந்நிய தொகுப்பு முதலீடுகள் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. இவற்றில் 25 நாடுகள் அதிக ஆபத்தானவை என கணக்கிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்