TNPSC Thervupettagam

குளோரோபிரின் - இரசாயன ஆயுதம்

May 14 , 2024 65 days 133 0
  • இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை மீறி உக்ரைன் நாட்டின் படைகளுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
  • உக்ரைனில் இரசாயன காரணியான குளோரோபிரைனை ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்காவின் தகவல் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
  • குளோரோபிரின் என்ற இரசாயன மூலக்கூறானது போரில் ஆயுதமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதனை சுவாசித்தால், அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.
  • நைட்ரோகுளோரோஃபார்ம் என்றும் அழைக்கப்படும், குளோரோபிரின் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்புக் காரணியாகவும், களைக்கொல்லி மற்றும் நூற்புழுக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இது முதல் உலகப் போரில் நேச நாடுகளாலும் அச்சு நாடுகளாலும் முதலில் உருவாக்கப் பட்டது.
  • குளோரோபிரின் மனிதர்களில் எரிச்சலூட்டும் தன்மை மற்றும் கண்ணீரைத் தூண்டும் விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு மேலும் இது மிகவும் நச்சுத்தன்மையுடையது மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையையும் கொண்டது என்றும் அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்