ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியமானது (UNICEF), "2024 ஆம் ஆண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த அறிக்கையினை” வெளியிட்டுள்ளது.
உலகளவில், நான்கில் ஒரு குழந்தை (27 சதவீதம்), அவர்களின் ஆரம்பகால குழந்தைப் பருவத்தில் கடுமையான குழந்தை உணவு வறுமையை (CFP) எதிர்கொள்கிறது.
இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட சுமார் 181 மில்லியன் குழந்தைகள் இந்த வறுமையினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கடுமையான குழந்தைப் பருவ உணவு வறுமையில் வாழும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (65 சதவீதம்) குழந்தைகள் இருபது நாடுகளில் வசிக்கின்றனர்.
இந்தியாவில், 40% குழந்தைகள் கடுமையான குழந்தைப் பருவ உணவு வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில், இது தெற்காசியாவில் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு ஆகும்.
பொருளாதாரச் சமத்துவமின்மையால் சுமார் 74% குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலை உள்ளது.
மேலும் சுமார் 69% இந்தியர்கள் மட்டுமே மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைப் பயன்படுத்துகின்றனர்.