TNPSC Thervupettagam

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த யுனிசெஃப் அறிக்கை

October 15 , 2019 1775 days 623 0
  • மோசமான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறை ஆகியவற்றின் விளைவுகளால் ஆபத்தான வகையில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் அவதிப் படுகின்றார்கள் என்று யுனிசெப் எச்சரித்துள்ளது.
  • இது “2019 ஆம் ஆண்டில் உலகில் உள்ள குழந்தைகளின் நிலை: குழந்தைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ஐந்து வயதிற்குட்பட்ட 3 குழந்தைகளில் 1 குழந்தையானது (அல்லது 200 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்) ஊட்டச்சத்து குறைபாடு அல்லது அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர் என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • ஆறு மாதங்களுக்கும் இரண்டு வயதுக்கும் இடைப்பட்ட 3 குழந்தைகளில் கிட்டத்தட்ட 2 குழந்தைகளுக்கு அவர்களின் வேகமாக வளர்ந்து வரும் உடல்கள் மற்றும் மூளைகளின் வளர்ச்சிக்கு உதவும் உணவு அளிக்கப் படுவதில்லை.
  • இது மோசமான மூளை வளர்ச்சி, மோசமான கற்றல், குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி, நோய்த் தொற்றுகள் அதிகரிப்பு மற்றும் சில சூழ்நிலைகளில் இறப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.
  • இந்த அறிக்கையானது 21 ஆம் நூற்றாண்டின் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அனைத்து வடிவங்களிலும் ஒரு மிக விரிவான மதிப்பீட்டை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்