TNPSC Thervupettagam

குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மேலாண்மைக்கான நெறிமுறை

October 18 , 2023 277 days 180 0
  • இந்தியாவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விரிவானப் பராமரிப்பு வழங்குவதற்காக ஒரு தரப்படுத்தப்பட்ட தேசிய நெறிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது பசியுணர்வுச் சோதனை மற்றும் "அரும்பும் தாய்" கருத்தாக்கம் (ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தையின் தாய்க்கு ஆரோக்கியமான குழந்தையின் தாய் வழி காட்டுதல்) போன்ற புதிய முன்னெடுப்புகளை உள்ளடக்கியது.
  • இது அங்கன்வாடி அளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு மேலாண்மை செய்வதற்கான விரிவான 10 நிலை வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
  • இது பரிந்துரை, ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கான முடிவெடுத்தல் ஆகியவற்றினை உள்ளடக்கியது.
  • அசாம் மாநிலத்தில் முதன்முதலாக " அரும்பும் தாய்" கருத்தாக்கம் பயன்படுத்தப் பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வாரமும் அங்கன்வாடி மையத்தில் உள்ள ஆரோக்கியமான ஒரு குழந்தையின் தாய் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள ஒரு குழந்தையின் தாயை வழி நடத்துகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்