TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான எண்ணிம சுகாதார அட்டைகள்

May 16 , 2023 431 days 234 0
  • நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மற்றும் லக்னோ திறன்மிகு நகரம் ஆகியவை இணைந்து “பள்ளிச் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • இவ்வாறாக, இந்தியாவில் இந்த மாதிரியான வசதியினை அளித்த முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் ஆகியுள்ளது.
  • இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ், லக்னோவில் உள்ள மூன்று பள்ளிகளில் லக்னோ திறன்மிகு நகரத்தினால் பள்ளிச் சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் 1765 மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் ஒரு ஒட்டு மொத்த உடல் மற்றும் மன நலன் குறித்த எண்ணிம சுகாதார அறிக்கை அட்டை தயாரிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள குறியீடு உருவாக்கப்பட்டு,  பின் அதனைப் பயன்படுத்தி குழந்தையின் பெற்றோர், பள்ளி மற்றும் நிர்வாக அதிகாரிகள் அந்த சுகாதார அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.
  • இந்த எண்ணிம சுகாதார அட்டைகளின் மேற்பட்ட ஒரு ஆய்வானது, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது.
  • ஒரு குழந்தை நோய் காரணமாக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அந்தக் குழந்தைக்கு ரூ.25,000 மதிப்பிலான உதவிகளை வழங்கும் சுகாதார அட்டை மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்