இரண்டு முதல் நான்கு வயது வரையிலான மழலைகளுக்கு இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ‘குழந்தைகளுக்கான ஒலிம்பிக்’ (Baby Olympic) போட்டியை நடத்துவதற்கான திட்டத்தை பஹ்ரைன் அறிவித்துள்ளது.
தடகளம், ஜிம்னாஸ்டிக், கால்பந்து, கூடைப்பந்து, பளுதூக்குதல் போன்ற ஐந்து விளையாட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.
விளையாட்டை இளையோர்கள் தம் வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.