TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான சமூகப் பாதுகாப்பு பற்றிய அறிக்கை

March 28 , 2023 608 days 292 0
  • குழந்தைகளுக்கான சமூகப் பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது கூட்டு அறிக்கை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
  • உலகளவில் 0-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 26.4 சதவீதம் (4 குழந்தைகளில் 1 பேர் மட்டுமே) சமூகப் பாதுகாப்புத் திட்டத்தால் பாதுகாக்கப் படுகிறார்கள்.
  • மீதமுள்ள 73.6 சதவீதம் பேர் வறுமை, புறக்கணிப்பு மற்றும் பல்பரிமாணப் பற்றாக் குறைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
  • 0-18 வயதுக்குட்பட்ட 1.77 பில்லியன் அளவிலான குழந்தைகளுக்கு குழந்தை தொடர்பான அல்லது குடும்பத்திற்கான பண உதவி பலன் கிடைப்பதில்லை.
  • இது ஒரு சமூகப் பாதுகாப்பு அமைப்பின் அடிப்படைத் தூணாகும்.
  • குழந்தைகளுக்கான பயனுள்ளச் சமூகப் பாதுகாப்பில் பிராந்திய அளவில் பெரிய அளவிலான ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.
  • அமெரிக்காவில், பலனடைவோர் 57.4% ஆகவும், அரபு நாடுகளில் 15.4% ஆகவும், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் தற்போது 18.0% ஆகவும் உள்ளது.
  • 31 இந்திய மாநிலங்கள் தொற்றுநோய்களின் போது தொடங்கப்பட்ட தேசிய அளவிலான “குழந்தைகளுக்கான PM CARES” திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.
  • இதுவரை, 4,302 குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்