TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான சர்வதேச அமைதிப்பரிசு

December 8 , 2017 2417 days 763 0
  • சிரியா நாட்டைச் சேர்ந்த குழந்தை அகதிகளின் உரிமைகளை உறுதி செய்வதில் முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, 16 வயது முகமது அல் ஜவுன்டே எனும் சிரிய நாட்டு குழந்தைக்கு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதிப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • சிரியாவின் உள்நாட்டு போரால் அகதியான அல் ஜவுன்டேவுக்கு, பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடி, 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாய் பரிசினை வழங்கினார்.
  • இச்சிறுவன் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து லெபனான் அகதிகள் முகாமில் பள்ளியினை ஏற்படுத்தி உள்ளான். தற்போது சுமார் 200 குழந்தைகள் இங்கு கல்வி கற்று வருகின்றனர்.
  • 2005-ஆம் ஆண்டு முதல் “கிட்ஸ் ரைட்ஸ்” எனும் அறக்கட்டளை ஆனது ஆண்டு தோறும் இவ்விருதை வழங்கி வருகின்றது.
  • உலகம் முழுவதும் குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்