தமிழகத்தின் முதல் குழந்தைகளுக்கான கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்தியாவில் இம்மாதிரியான ஒரு கொள்கையினை வெளியிடும் முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
இது அவர்களுக்கு ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம் உட்பட பாதுகாப்பான சூழல் மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குழந்தைகளின் வளர்ந்து வரும் தேவைகள், முடிவுகளின் மதிப்பீடு, முடிவுகள், இந்தக் கொள்கையின் வரம்பிற்குள் வரும் பல்வேறு அம்சங்களின் குறிகாட்டிகள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் போதுமான ஆதாரங்களை ஒதுக்கீடு செய்ய, குழந்தை வரவு செலவுத் திட்டத்தை தமிழ்நாடு தொடர்ந்து செயல்படுத்தும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் அடையப்பட்ட விளைவுகளையும் தாக்கத்தையும் மதிப்பாய்வு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்தக் கொள்கை திருத்தப் படும்.