2021 ஆம் ஆண்டில், 5 மில்லியன் குழந்தைகள் தனது 5 வயதினை அடையும் முன்பே இறந்துள்ளனர்.
அதே ஆண்டில் 5 முதல் 24 வயதுக்குட்பட்ட 2.1 மில்லியன் அளவிலான குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில், உலகளவில் பதிவான ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 38 இறப்புகள் ஆக இருந்தது.
ஆனால் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் இந்த விகிதமானது 1,000 பிறப்புகளுக்கு 74 என்ற அளவில் உள்ளது.
குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், 2021 ஆம் ஆண்டில் பதிவான ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 67 இறப்புகள் ஆகும்.
அதிக வருமானம் உள்ள நாடுகளில் 1,000 பிறப்புகளுக்கு 5 இறப்புகள் என்ற விகிதமே பதிவாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா நாடுகள் மற்றும் தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் மற்ற எல்லாப் பகுதிகளையும் விட அதிகமான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இறப்பு ஆனது பதிவாகியுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் மற்றும் 5-24 வயதுக்குட்பட்ட நபர்களிடையே பதிவான 70 சதவீத இறப்புகள் ஆகியவை ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி மற்றும் தெற்கு ஆசியா ஆகிய நாடுகளிலேயே பதிவாகியுள்ளன.
குழந்தை பிறந்த முதல் 28 நாட்கள் அந்தக் குழந்தை உயிர்வாழ்வதற்குப் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் வகையிலான காலமாகும்.
2021 ஆம் ஆண்டில், குழந்தை பிறந்த முதல் மாதத்தில் சுமார் 2.3 மில்லியன் குழந்தைகள் அல்லது ஒரு நாளைக்கு 6,400 குழந்தைகள் இறந்துள்ளன.