TNPSC Thervupettagam

குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் நிலவர அறிக்கை – 2018

September 20 , 2018 2263 days 677 0
  • யுனிசெப் மற்றும் ஐ.நா-வின் குழந்தைகள் இறப்பு மதிப்பீட்டிற்கான சர்வதேசக் குழுவானது குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் நிலவர அறிக்கை – 2018ஐ வெளியிட்டுள்ளது. இது உலகமெங்கிலும் உள்ள குழந்தைகளின் முழு நிலைமை மற்றும் அவர்களின் இறப்பு விகிதங்களின் நிலையைக் காட்டுகிறது.
  • இந்த அறிக்கையின்படி ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் உலகின் அதிக அளவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டில் இந்தப் பகுதி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை சராசரியாக 1000 உயிருள்ள பிறப்புகளுக்கு 76 என்ற அளவில் கொண்டிருந்தது.
  • இந்தியாவில் 2012-ல் ஏறக்குறைய 22%-லிருந்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 2017-ல் 18%-ஆக குறைந்துள்ளது. மேலும் ஒரு மில்லியன்களுக்கு (பத்து லட்சம்) குறைவாக (9,89,000) இருப்பது இதுவே முதன்முறையாகும்.
  • 2017-ல் இந்தியாவில் சுமார் 8,02,000 குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.
  • ஆனால் இந்தியாவானது குழந்தை இறப்புகள் அளவில் இன்னும் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன.
  • 2017-ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் 15 வயதிற்குட்பட்ட3 மில்லியன் என்று கூறப்பட்ட அளவில் குழந்தைகள் இறந்திருக்கின்றன. இது ஒவ்வொரு 5 வினாடிக்கும் ஒரு குழந்தை இறப்புக்கு சமமாகும்.
  • இந்த அறிக்கையானது, மொத்த இறப்புகளில் 80% அல்லது4 மில்லியன் இறப்புகள் குழந்தைகளின் முதல் 5 வயதிற்குள் ஏற்படுவதாக குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்