குழந்தைகள் உயிரிழப்பு மதிப்பீட்டிற்கான ஐநா சபையின் இடைமுகமை
March 18 , 2024 251 days 213 0
குழந்தைகள் உயிரிழப்பு மதிப்பீட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இடைமுகமை குழுவின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய குழந்தைகள் உயிரிழப்பு வரலாறு காணாத அளவிலான குறைந்த அளவை எட்டியுள்ளன.
2000 ஆம் ஆண்டில் 9.9 மில்லியனாக இருந்த உலகளாவிய ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் சுமார் 4.9 மில்லியனாக பாதிக்கு மேல் குறைந்துள்ளது.
உலகளவில், பச்சிளம் குழந்தை உயிரிழப்புகள் அல்லது பிறந்த 28 நாட்களுக்குள் ஒரு குழந்தை இறப்பது, ஒவ்வொரு 14 வினாடிகளுக்கும் நிகழ்ந்தது.
2022 ஆம் ஆண்டில் ஒவ்வோர் ஆறு வினாடிக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையும், 35 வினாடிகளுக்கு ஓர் இளம் பருவத்தினரும் இறந்தனர்.
1990 ஆம் ஆண்டின் மதிப்பீடுகளை விட, குழந்தை உயிரிழப்புகள் சுமார் 62 சதவிகிதம் குறைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
2000 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளவில் 221 மில்லியன் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 162 மில்லியன் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு சுமார் 72 மில்லியன் ஆகும் என்ற நிலையில் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பில் ஐந்து வயதிற்குட்பட்ட இறப்புகள் அதிக அளவில் உள்ளன.
2000 ஆம் ஆண்டில் சுமார் 41 சதவீதமாக இருந்த பச்சிளம் குழந்தை பருவத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு போக்கு 2022 ஆம் ஆண்டில் 47 சதவீதமாக அதிகரித்துள்ளது.