ஐக்கிய நாடுகள் சபையானது, “குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை” மேற்கோள் காட்டி, குழந்தைகள் மீது ஆயுத மோதல்களின் தாக்கம் குறித்த தனது வருடாந்திர அறிக்கையிலிருந்து இந்தியாவை நீக்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது சுமார் 27,180 கடுமையான அத்துமீறல் சம்பவங்களை மதிப்பிட்டுள்ள நிலையில், அதில் சுமார் 24,300 சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப் பட்டன.
2,880 சம்பவங்கள் முன்னதாகவே நடைபெற்றுள்ளன, ஆனால் 2022 ஆம் ஆண்டில் அவை உறுதி செய்யப்பட்டன.
24 சூழ்நிலைகள் மற்றும் ஒரு பிராந்தியக் கண்காணிப்பு ஏற்பாடுகளில் நிகழ்ந்த அத்து மீறல்களில் 18,890 குழந்தைகள் (13,469 சிறுவர்கள், 4,638 சிறுமிகள், 783 பாலினம் தெரிய வில்லை) பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச எண்ணிக்கையிலான பல அத்துமீறல்களில் 8,631 குழந்தைகளின் கொலை (2,985) மற்றும் ஊனமாக்குதல் (5,655) போன்றவை அடங்கும்.
அதைத் தொடர்ந்து 7,622 குழந்தைகளின் பணி சேர்ப்பு மற்றும் பயன்பாடு மற்றும் 3,985 குழந்தைகள் கடத்தப்படுதல் ஆகியவை உள்ளன.
ஆயுதம் தாங்கியக் குழுக்களுடனான நிகழ்நேர அல்லது இணைப்புத் தொடர்புக்காக குழந்தைகள் (2,496) கடத்தப்பட்டு, அடைத்து வைக்கப் படுகின்றனர்.