குழந்தைகள் மீது ஆயுத மோதலின் தாக்கம் பற்றிய UNSG அறிக்கை
July 3 , 2023 511 days 328 0
சமீபத்தில் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டார்.
குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் குழந்தைகளைச் சிறப்பாகப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை நன்கு கருத்தில் கொண்டு இந்த அறிக்கையானது அந்தப் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கியுள்ளது.
இந்த அறிக்கையில் குழந்தைகள் மீதான ஆயுத மோதலின் தாக்கம் மற்றும் மீறல்கள் பற்றிய தகவல் தொடர்பான விவரங்கள் அடங்கி உள்ளன.
இதுவரை இந்த மீறல்களால் 18,890 குழந்தைகள் (13,469 சிறுவர்கள், 4,638 பெண்கள், 783 நபர்களின் பாலினம் தெரியவில்லை) பாதிக்கப் பட்டுள்ளனர்.