TNPSC Thervupettagam

குழந்தை இறப்பு விகிதம் – தமிழ்நாட்டில் 17 ஆகக் குறைவு

October 1 , 2017 2672 days 1089 0
  • தேசிய மாதிரி கணக்கெடுப்பின் சமீபத்திய அறிக்கையின்படி தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் இரண்டு புள்ளிகள் குறைந்து 17 ஆக பதிவாகியுள்ளது. ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் போது, அதில் நிகழும் இறப்புகள் கணக்கை வைத்து குழந்தை இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது.
  • இத்தகைய ஆரோக்கியமான நிலையினை தமிழ்நாடு பெறுவதற்கு மூன்று காரணிகள் முக்கியமாக கருதப்படுகிறது ,
    1. பச்சிளம் குழந்தைகள் பிறக்கும் காலக்கட்டத்தில் எளிமையாகவும் மலிவாகவும் சுகாதார வசதிகள் கிடைக்கிறது.
    2. மாநிலத்தின் பெருமளவு குழந்தைகள் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு பெறுகின்றன (குறிப்பாக தட்டம்மை , ரூபெல்லா மாற்றும் ரோட்டா வைரஸ் தடுப்பூசி).
    3. அதிக அளவு குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறைந்துள்ளது [தமிழ்நாட்டில் நூற்றில் எட்டு பெண்கள் (8 out of 100)மட்டுமே இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்கின்றனர்]
  • மாநிலத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு (Neonatal ICU - NICU) மற்றும் தாய்மார்களுக்கு விரிவான மகப்பேறு கால அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை மாநிலத்தில் செம்மையாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • தமிழ்நாட்டில் 99 சதவீத குழந்தை பிறப்புகள் மருத்துவமனைகள் அல்லது மருத்துவ உதவி மையங்களில் நடைபெறுவதால் , குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டும் ஊட்ட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருவதால் , மேலும் இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்