TNPSC Thervupettagam

குழந்தை கடத்தல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் 2025

April 20 , 2025 3 days 49 0
  • உச்ச நீதிமன்றமானது, குழந்தைக் கடத்தல் மற்றும் அதன் விளைவாக எழும் கடும் குற்றங்களைத் தடுப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்குமான வழிகாட்டுதல்கள் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்த வழிமுறைகளைச் செயல்படுத்துவதில் ஏதேனும் மெத்தனம் இருந்தால் அது தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் காணாமல் போயிருப்பதும் கடத்தப்படுவதும் கண்டறியப்பட்டால் மருத்துவமனைகளின் உரிமம் இடைநிறுத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
  • “எந்தவொரு பெண்ணும் தனது குழந்தையைப் பெற்றெடுக்க எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, ​​பச்சிளம் குழந்தையை இனி அனைத்து வகையிலும் நன்கு பாதுகாப்பது அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
  • நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் நிலுவையில் உள்ள அனைத்து குழந்தை கடத்தல் வழக்குகளையும் எடுத்து, அவை இனி ஆறு மாதங்களுக்குள் விசாரணைகள் முடிவடைவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்