TNPSC Thervupettagam

குழந்தை கடத்தல் குறித்த சர்வதேசப் புலம்பெயர்வு அமைப்பின் அறிக்கை

July 14 , 2023 371 days 267 0
  • ‘ஆதாரம் முதல் நடவடிக்கை வரை: கொள்கை மற்றும் திட்ட உருவாக்கத்திற்கு தகவல் வழங்குவதற்கான சர்வதேசப் புலம் பெயர்வு அமைப்பின் இருபது வருட குழந்தை கடத்தல் பற்றிய தரவு வழங்கீட்டுச் சேவை’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இது கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சர்வதேசப் புலம் பெயர்வு அமைப்பின் தரவுத் தளத்தை (VoTD) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான, உலகளவில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையிலான முதல் வகை அறிக்கை ஆகும்.
  • இந்த அறிக்கையின்படி, குழந்தைக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே கடத்தப்படுகிறார்கள்.
  • சர்வதேசக் கடத்தல் வழக்குகளில், குழந்தைகள் பெரும்பாலும் அண்டை நாடுகள் மற்றும் பணக்கார நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றனர்.
  • கடத்தப்படும் குழந்தைகளில் பாதி பேர், அதில் பெரும்பாலும் உள்ள சிறுவர்கள், வீட்டு வேலை, பிச்சை எடுத்தல் மற்றும் வேளாண்மை போன்றப் பல்வேறு தொழில்களில் கட்டாய உழைப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
  • கடத்தப்படும் குழந்தைகளில் 20 சதவிகிதம் பேர், முக்கியமாக சிறுமிகள் விபச்சாரம், ஆபாசப் படம் எடுத்தல் மற்றும் பாலியல் அடிமைத்தனம் உள்ளிட்ட பல பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
  • 186 நாடுகளில் கடத்தப்பட்ட, 156 நாடுகளைச் சேர்ந்த 69,000க்கும் மேற்பட்ட பாதிக்கப் பட்டவர்கள் குறித்த முதன்மைத் தரவுகள் இந்த அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்