TNPSC Thervupettagam

குழந்தை பருவ முடிவுக் குறியீடு - 2018

June 6 , 2018 2364 days 696 0
  • குழந்தைகளைப் பாதுகாப்போம் (Save the Children’s) எனும் அமைப்பின் 2018 ஆம் ஆண்டின் “குழந்தைப் பருவ முடிவுக் குறியீட்டின்” (End of Childhood Index 2018) படி, 175 நாடுகளுள் இந்தியா 113-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு 116-வது இடத்திலிருந்த இந்தியா இவ்வாண்டு மூன்று இடங்கள் முன்னேறி 113-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இக்குறியீட்டில் சிங்கப்பூர் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய இரு நாடுகளும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. நைஜீரியா கடைசி இடத்தை அதாவது 175-வது இடத்தைப் பிடித்துள்ளது.

  • இக்குறியீட்டில் அமெரிக்கா மற்றும் இரஷ்யா 36 மற்றும் 37 இடத்திலும், சீனா 40வது இடத்திலும் உள்ளன.
  • இக்குறியீடானது உலக நாடுகள் மேற்கொள்ளும் குழந்தைத் திருமணங்கள் குறைப்பு விகிதத்தின் மேம்பாட்டினை கணக்கிடுகிறது. “விலக்குதலின் பல்வேறு முகம்” (The Many Faces of Exclusion) எனும் அறிக்கையின் ஒரு பகுதியே இக்குறியீடாகும்.
  • இக்குறியீடானது உலக அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் (under five mortality rate) ஆயிரம் உயிருள்ள பிறப்புகளுக்கு (deaths per 1000 live births) 43 எனச் சுட்டியுள்ளது.
  • மேலும் குழந்தைகள் வளர்ச்சி குன்றலை (Child Stunting) - அதாவது 0-59 மாத வயதுடைய குழந்தைகள் வளர்ச்சி குன்றலை4 சதவீதம் என்று அறிவித்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்