அசாம் அரசானது, தற்போது நடைபெற்று வரும் ஸ்வச்சதா ஹி சேவா பிரச்சாரத்தின் போது அதன் கிராமப்புற சமூகங்களிடையே குழாய் வழி உரத் தயாரிப்பு முறையினை பெருமளவில் ஊக்குவித்து வருகிறது.
8 முதல் 10 அங்குல விட்டம் மற்றும் 1.25 மீட்டர் நீளம் கொண்ட PVC குழாய்களைப் பயன்படுத்திக் கரிமக் கழிவுகளை உரமாக மாற்றும் முறை குழாய் வழி உரமாக்கல் தொழில்நுட்பம் ஆகும்.
குழாய்கள் 25-30 செ.மீ. ஆழத்திற்கு தரையின் உள்ளே செங்குத்தாக வைக்கப்படும்.
மிஞ்சிய உணவு, பழங்கள் மற்றும் காய்கறித் தோல்கள், பூக்கள், சாணம், வேளாண் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை மட்டுமே இந்தக் குழாய்களில் உரமாக்க முடியும்.
புழுக்களின் வளர்ச்சி துரிதமாக்குவதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மிகச் சிறிதளவு பசுவின் சாணம் மற்றும் காய்ந்த இலைகளைத் தண்ணீரில் கலந்து உள்ளே ஊற்றப்படுகிறது.
மழைநீர் குழாய்களுக்குள் செல்லாதவாறு இது எப்போதும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
2 மாதங்களுக்குப் பிறகு குழாயைத் தூக்கி உரத்தினை வெளியெடுக்கலாம்.