மேம்பட்ட விண்வெளி சார்ந்த சூரிய ஆய்வகக் கலமானது (ASO-S) சீன நாட்டினால் லாங் மார்ச்-2டி கேரியர் என்ற விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
சூரியனை உள்ளீர்த்துத் தன்னுள் ஈர்க்க முயன்ற ஒரு புராண இராட்சசனின் பெயரால் இதற்கு குவாஃபு-1 என்று பெயரிடப்பட்டது.
"சூரிய உச்சநிலை" நேரத்தில் முன்பு கிடைத்திராத சூரியனின் படங்களை எடுத்து மற்றும் ஆய்வு செய்ய அறிவியலாளர்களுக்கு இது உதவும்.
சூரிய ஒளியின் உச்ச நிலையானது 2025 ஆம் ஆண்டில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ASO-S என்பது சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கெனவே பிரத்தியேகமாக ஏவப்பட்ட சீனாவின் முதல் முழு அளவிலான செயற்கைக்கோள் ஆகும்.
இது உலகின் முதல் சூரிய தொலைநோக்கி ஆகும் என்பதோடு, இது சூரியக் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெளிப்புற வெப்ப வெளியேற்றம் ஆகிய இரண்டு நிகழ்வுகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டதாகும்.
இந்த ஆய்வுப் பணியானது, நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சூரிய ஆய்வு சுற்றுக்கலம் ஆகியவற்றைப் போன்றது.
சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக 2023 ஆம் ஆண்டில் ஆதித்யா-L1 என்ற சூரிய ஆய்வுப் பணியை இந்தியா தொடங்க திட்டமிட்டுள்ளது.