TNPSC Thervupettagam

குவாசரின் 'ஐன்ஸ்டீன் வளையம்'

July 18 , 2024 129 days 247 0
  • நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது (JWST) ஐன்ஸ்டீன் வளையம் எனப்படும், துடிப்பு அண்டங்களால் (குவாசர்) உருவாக்கப்பட்ட ஒளியின் "சிறப்பு" ஒளி வளையத்தினைப் படம் பிடித்துள்ளது.
  • RX J1131-1231 எனப்படும் இந்த துடிப்பண்டம் ஆனது, பூமியிலிருந்து தோராயமாக 6 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கிரேட்டர் விண்மீன் மண்டலத்தில் அமைந்து உள்ளது.
  • நான்கு பிரகாசமான பகுதிகளால் பிரகாசமாகப் புலப்படும் அதன் ஒளிரும் வளையத்தினைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்ற ஐன்ஸ்டீன் வளையம் ஆனது ஈர்ப்புக் குவியம் எனப்படும் ஒரு நிகழ்வின் விளைவாக ஏற்படுகிறது.
  • தொலைதூரப் பொருளிலிருந்து வரும் ஒளியானது, தொலைதூரப் பொருளுக்கும் பார்வையாளருக்கும் இடையில் அமைந்துள்ள மற்றொரு மாபெரும் பொருளின் ஈர்ப்பு விசையால் திசை திருப்பப்பட்ட விண்வெளி நேரத்தின் வழியாகப் பயணிக்கும்போது ஈர்ப்புக் குவிய நிகழ்வு ஏற்படுகிறது.
  • ஈர்ப்புக் குவிய நிகழ்வு குறித்த கருத்து ஆனது முதன்முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களால் 1915 ஆம் ஆண்டில் அவரது பொது சார்பியல் கோட்பாட்டில் கணிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்