TNPSC Thervupettagam

குவாசர் மற்றும் அண்டங்களின் மோதல்கள்

May 4 , 2023 444 days 219 0
  • வானியலாளர்கள் முதன்முதலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பேரண்டத்தின் பிரகாசமான மற்றும் மிக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படும் குவாசர்களைக் கண்டுபிடித்தனர்.
  • ஆனால் அவற்றின் தோற்றம் பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை.
  • தற்போது, ​இந்த வானியல் பொருட்கள் உருவாக்கப் படுவதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • குவாசர்கள் என்பது செயலில் உள்ள அண்ட உட்கருக்களின் ஒரு வகையாகும்.
  • அவை அண்டங்களின் மையத்தில் அமைந்துள்ள மாபெரும் கருந்துளைகளில் அமைந்துள்ளன.
  • அண்டங்களின் மோதலே குவாசர்களின் உருவாக்கத்தினைத் தூண்டுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • குவாசர்களைக் கொண்டுள்ள அண்டங்கள் மற்ற அண்டங்களுடன் மோதுவதற்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
  • ஆய்வு செய்யப்பட்ட குவாசர்களைக் கொண்டுள்ள அண்டங்களில் சுமார் 65% அண்டங்கள் முந்தைய காலங்களில் அண்ட இணைப்புகள் அல்லது மோதல்களை எதிர் கொண்ட அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்