TNPSC Thervupettagam

குவாட் நாடுகளின் இணையவெளிப் பாதுகாப்பு சவால்

March 8 , 2023 630 days 312 0
  • நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை அமைப்பு அல்லது குவாட் அமைப்பு, தங்களது நாடுகளில் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக என்று, 'குவாட் நாடுகளின் இணையவெளிப் பாதுகாப்பு சவால்' என்ற பொதுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • குவாட் அமைப்பானது இந்திய-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளின் இணையப் பயனர்களை இந்தச் சவாலின் ஓர் அங்கமாக விளங்கவும், "பாதுகாப்பான மற்றும் பொறுப்புமிக்க இணையவெளிப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றவும் அழைப்பு விடுத்துள்ளது.
  • இவை இணைய வெளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், உலக நாடுகள் மற்றும் பல்வேறு பயனர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நெகிழ்திறன் மிக்க இணையச் சூழலை உருவாக்குவதற்குமான குவாட் நாடுகளின் தொடர்ச்சியான முயற்சிகளாகும்.
  • இந்தியாவில் இந்த நடவடிக்கைகளானது, தேசியப் பாதுகாப்புச் சபையின் செயலகத்துடன் இணைந்துத் தேசிய இணையவெளி ஒருங்கிணைப்பு அலுவலகம் என்பதினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
  • குவாட் அமைப்பானது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்