மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது அமேசான் இணையச் சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து குவாண்டம் கணினியியல் பயன்பாடுகள் ஆய்வகத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது அமேசானின் பிராக்கட் என்ற மேகக் கணினி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட குவாண்டம் கணினியியல் சேவையைத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் அணுக வழிவகை செய்கின்றது.