TNPSC Thervupettagam

குவாண்டம் கணினி உருவகக் கருவித் தொகுப்பு

August 31 , 2021 1091 days 567 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இந்தியாவின் முதலாவது ‘குவாண்டம் கணினி உருவகக் கருவித் தொகுப்பினை’ (Qsim - Quantum Computer Simulator Toolkit’) வெளியிட்டுள்ளது.
  • இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வகையிலான முதல் கருவித் தொகுப்பு ஆகும்.
  • குவாண்டம் கணினிகளின் உதவியோடு நிரலாக்கத்தின் நடைமுறை அம்சங்களைக் கற்றுக் கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் இது ஒரு முக்கியக் கருவியாகும்.
  • இந்தக் கருவித் தொகுப்பானது  ரூர்க்கியின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், C-DAC மற்றும் பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் அறிவியலாளர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவு மற்றும் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்