குறியாக்கம், பந்தயம் மற்றும் கணினியின் கணித மாதிரி செயல்முறை ஆகியவற்றிற்கான புதிய குவாண்டம் சமவாய்ப்பு எண் உருவாக்க அமைப்பினை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இது பெரோவ்ஸ்கைட் எனப்படும் படிகம் போன்ற பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட LED திரைகளைப் பயன்படுத்துகிறது.
ஒரு கணினி நிரலாகவோ அல்லது வன்பொருளாகவோ செயல்படும் ஒரு சமவாய்ப்பு எண் உருவாக்க அமைப்பானது, தரவுகளைக் குறிமுறையாக்கம் செய்வதற்காகப் பயன்படுகிறது.
தகவல் பெறும் நிலையில் உள்ள தரவானது பல்வேறு சமவாய்ப்பு எண் உருவாக்க அமைப்புகளால் உருவாக்கப்பட்ட விசைகளைப் பயன்படுத்திக் குறியாக்கம் செய்யப் பட்டு மறைகுறியாக்கப் படுகிறது.