புது தில்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உயர் நுண் உணர்வியான குவாண்டம் வெப்ப நிலைமானியை மேம்படுத்தியுள்ளனர்.
இது வெப்ப நிலையில் ஏற்படும் நுண் கெல்வின் மாற்றங்களை அளவிடும். இது விரைவாக முடிவுகளை அளிக்கும்.
இந்த உயர் நுண் உணர்வி குவாண்டம் வெப்ப நிலைமானியானது கிராபைன் குவாண்டம் புள்ளிகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டது.
கிராபைன் குவாண்டம் புள்ளிகள்
கிராபைன் குவாண்டம் புள்ளிகள் (GQDs - graphene quantum dots) ஆனது கிராபைனின் ஒற்றை அடுக்கிலிருந்துப் பல அடுக்குகளைக் கொண்ட குறைவான துண்டுகள், அளவில் சிறியவை அல்லது களங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.
GQDs ஆனது உயிரியல், ஒளி மின்னணுவியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாடுகள் ஆகியவற்றில் பயன்படுகின்றது.