TNPSC Thervupettagam

குவாண்டம் வெப்ப நிலைமானி

April 28 , 2019 2039 days 629 0
  • புது தில்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உயர் நுண் உணர்வியான குவாண்டம் வெப்ப நிலைமானியை மேம்படுத்தியுள்ளனர்.
  • இது வெப்ப நிலையில் ஏற்படும் நுண் கெல்வின் மாற்றங்களை அளவிடும். இது விரைவாக முடிவுகளை அளிக்கும்.
  • இந்த உயர் நுண் உணர்வி குவாண்டம் வெப்ப நிலைமானியானது கிராபைன் குவாண்டம் புள்ளிகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டது.
கிராபைன் குவாண்டம் புள்ளிகள்
  • கிராபைன் குவாண்டம் புள்ளிகள் (GQDs - graphene quantum dots) ஆனது கிராபைனின் ஒற்றை அடுக்கிலிருந்துப் பல அடுக்குகளைக் கொண்ட குறைவான துண்டுகள், அளவில் சிறியவை அல்லது களங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.
  • GQDs ஆனது உயிரியல், ஒளி மின்னணுவியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாடுகள் ஆகியவற்றில் பயன்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்