TNPSC Thervupettagam

குவாமி ஏக்தா வாரம் - தேசிய ஒருங்கிணைப்பு வாரம்

November 27 , 2020 1373 days 432 0
  • இது இந்தியாவில் வகுப்புவாத ஒற்றுமை வாரம் என்றும் அழைக்கப்படுகிறது
  • இது நவம்பர் 19 முதல் நவம்பர் 25 வரை கொண்டாடப்படுகிறது.
  • இந்த வாரத்தின் முக்கிய கருப்பொருள் ‘மதச்சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்பு மற்றும் அகிம்சை’ என்பனவாகும்.
  • உள்நாட்டு விவகார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பான வகுப்புவாத ஒற்றுமைக்கான தேசிய அறக்கட்டளையானது குவாமி ஏக்தா வாரத்துடன் வகுப்புவாத நல்லிணக்கப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து நவம்பர் 25 அன்று வகுப்புவாத நல்லிணக்கக் கொடி நாளை அனுசரிக்கிறது.
    • நவம்பர் 19 ஆம் தேதி தேசத்தின் ஒருங்கிணைப்பு நாள் கொண்டாடப்படுகிறது.
    • நவம்பர் 20 ஆம் தேதி சிறுபான்மையினருக்கு நலன்புரியும் நாள் கொண்டாடப் படுகிறது.
    • நவம்பர் 21 ஆம் தேதி மொழியியல் நல்லிணக்க நாள் கொண்டாடப்படுகிறது.
    • நவம்பர் 22 ஆம் தேதி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான நாள் கொண்டாடப் படுகிறது.
    • நவம்பர் 23 ஆம் தேதி கலாச்சார ஒற்றுமைக்கான நாள் கொண்டாடப்படுகிறது.
    • நவம்பர் 24 ஆம் தேதி மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது.
    • நவம்பர் 25 ஆம் தேதி பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்