2030 ஆம் ஆண்டு அடைய இலக்கிடப்பட்ட நீடித்த மேம்பாட்டிற்கான நிகழ்ச்சி நிரலைப் பற்றிய மருத்துவப்பொருட்களுக்கான அணுகல், வர்த்தகம் மற்றும் சுகாதாரத்திற்கான சர்வதேச விதிகள் மீதான முதல் மாநாடு நவம்பர் 21 ஆம் தேதி புது டெல்லியில் தொடங்கப்பட்டது.
இந்தியாவிற்கான உலக சுகாதார மையத்தின் ஆதரவு உள்ள இந்த மாநாடு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் சர்வதேச விதிகளுக்கான இந்திய சங்கத்தின் (Society of International Law) கூட்டிணைவோடு நடத்தப்பட்டுள்ளது.
நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு மருத்துவ பொருட்களின் அணுகலுக்கான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களிலும்,சர்வதேச வர்த்தக சட்டங்களில் உள்ள நடப்பு பிரச்சனைக்களின் மேல் புரிதலை விரிவாக்குவதற்கும் , அவற்றைச் சார்ந்த அறிவைப் பகிர்வதற்கும் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.