குவார்ட்ஸ் படிகக் கல்லினால் செய்யப்பட்ட எடைக்கல் - கீழடி
August 11 , 2023 473 days 274 0
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 9 ஆம் கட்ட அகழாய்வில் குவார்ட்ஸ் படிகக் கல்லினால் செய்யப்பட்ட எடைக்கல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கீழடியில் ஒரு குவார்ட்ஸ் படிகக் கல் கண்டுபிடிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
இது இயற்கையில் ஒளி புகும் (பளிங்குக் கல்) வகையிலானதாகும்.
இது கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் மற்றும் செம்பூச்சு மட்பாண்டங்கள் ஆகியவையும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.
சுடுமண் பாண்டத்தினால் ஆன பாம்பு உருவத்தின் ஒரு எஞ்சியப் பகுதியும் இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது.
மதுரைக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இது சங்கக் காலத்தைச் சேர்ந்த தலத்தின் காலத்தை ஒத்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டத் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் பின்வரும் மிக ஆச்சரியமிக்கத் தகவல்களை வழங்கியுள்ளன.
மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் சங்க காலத்தின் காலகட்டத்தினை கி.மு. 300 முதல் கி.மு. 600 ஆம் காலகட்டத்தினைச் சேர்ந்ததாக எடுத்துரைக்கின்றன.
சிவகாலையில் உள்ள முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெற்கதிர்கள் 3,200 ஆண்டுகள் பழமையானது என கண்டறியப் பட்டுள்ளது.
4,200 ஆண்டுகளுக்கு முன்னதாக கி.மு. 2172 ஆம் ஆண்டில் தமிழர்கள் இரும்புத் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்திருந்தனர்.